நியூ இங்கிலாந்து ரிசர்ச் இன்ஸ்டிடியூடினை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி வாரத்திற்கு இரண்டு முறை உறவில் ஈடுபடுபவர்களுக்கு இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்று கண்டறிந்துள்ளனர். |
வம்பு
Monday, November 14, 2011
பாதுகாப்பான செக்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
Sunday, November 13, 2011
செக்ஸ் உறவுக்கு திரில்லான இடம் ?
அதெப்படி சமைக்கிற இடத்தில் என்று பலர் முனுமுனுக்கலாம். ஆனால் வீட்டிலேயே பெஸ்ட் ரூம் எது என்றால் அது சமையல் அறைதான், அதைத்தான் பெரும்பாலான தம்பதிகள் விரும்புகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.
சமையல் அறையில் உறவு கொள்ளும்போது சிறப்பாகவும், சீராகவும், வேகமாகவும், திரில்லாகவும் உள்ளதாக இந்த சர்வேயில் கலந்து கொண்ட பல்வேறு ஜோடிகளும் தெரிவித்துள்ளதாம்.
இதுதொடர்பான கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 44 சதவீதம் பேர் தாங்கள், சமையலறையில் உறவு வைத்துக் கொண்டதாக கூறியுள்ளனர். அவர்களில் பத்தில் ஒருவர், வாரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக அடுப்படியில் உறவை அரங்கேற்றுவதாக கூறியுள்ளனர்.
புதிதாக திருமணமானவர்களிடம்தான் இந்த நூதனப் போக்கு அதிகம் இருக்கும் என்று கருதலாம். அப்படி இல்லையாம், கல்யாணம் செய்து பல வருடங்களைக் கடந்து விட்ட ஜோடிகளும் கூட இப்படி நூதனமான இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனராம். சமையல் அறைதான் பெரும்பாலானோரின் விருப்ப இடமாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1000 பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் ஆஸ்திரேலியர்கள். எனவே இது ஆஸ்திரேலிய கணக்கு, இந்தியாவில் என்ன நிலை என்பது தெரியவில்லை...!
பயத்தை போக்கினால் தாம்பத்யத்தில் ஜெயிக்கலாம்
சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உறவில் அவ்வளவாக நாட்டமிருக்காது. இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறுவயதில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரியவர்கள் சொல்லிக்கொடுத்த விதமும் செக்ஸ் என்றாலே பெண்களிடம் ஒரு வித வெறுப்பினை ஏற்படுத்தி விடுகின்றன. உறவைப் பற்றிய தவறான மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன்றவையும் பெண்களது இப்பிரச்சினைக்குக் காரணங்கள்.
முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில் தொடங்கி குழந்தை பிறப்பதில், பிரசவ வலியில் உள்ள தேவையற்ற பயங்களும் இதற்குக் காரணங்களாக அமையலாம். உறவின் போது கணவன் ஒரே மாதிரியான நிலைகளைக் கையாள்வது அல்லது கண்மூடித்தனமாக ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளாலும் மனைவிக்கு உறவின் மீது மீது வெறுப்பு ஏற்படலாம். இருபத்தைந்து சதவிகிதப் பெண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கிறது ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு .
கூட்டுக்குடும்ப பிரச்சினை
கூட்டுக் குடும்பங்களில் இருக்கிற பெண்கள் பலர் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. நிறைய பேர் சூழ இருப்பதால் யாராவது தம்மைக் கவனித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்தரங்க உறவைத் தவிர்க்கவும், வெறுக்கவும் செய்வார்கள்.குழந்தை பெற்றுக் கொண்டால் இளமையும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவு கொள்வதையே தவிர்ப்பார்கள்.
உடலுறவு என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கணவன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார்கள். இந்நிலையில் அந்தப் பெண் உறவை வெறுக்கவும் மாட்டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியாது. செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது. விருப்பமிருந்தாலும்கூட இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இணங்காது. அதனாலேயே உறவின் மீது அனாவசிய வெறுப்பு ஏற்படும்.
எதிர்பார்ப்பு தரும் ஏமாற்றம்
திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு களும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவனின் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைவதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வு.
சில குடும்பங்களில் ஆண் குழந்தை பெறும் பெண்களுக்குத் தான் மதிப்பு. ஒரு வேளை தனக்கு ஆண் குழந்தை பிறக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் உறவிலிருந்து தப்பிக்க ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தப்பிக்கும் பெண் களும் உண்டு. நாளடைவில் அதுவே நிரந்தரமாகி விடும்.கணவனது தோற்றத்தில் திருப்தியில்லாத பெண்களும், தன் கணவனுக்கு தன்னையல்லாத வேறொரு பெண்ணுடன் உறவு உள்ளது என்று தெரிய வரும் பெண்களும்கூட தாம்பத்திய உறவைத் தவிர்ப்பார்கள்.
கணவன் மீதான வெறுப்பு
தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள்,கணவனின் மீதான வெறுப்பைக் காட்ட அவர்கள் நாடும் ஒரே வழி அதுவாகத்தான் இருக்கும்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு குறிப்பிட்ட நபர்களுடன் உறவு கொள்ள வேண்டி வரும் போது நாட்டமின்றிப் போவதும், தனக்கு விருப்பமுள்ளவர்களுடன் உறவு கொள்ளும் போது பிடித்துப் போய் இணங்குவதும் உண்டு.
அழகு பற்றிய விமர்சனம்
அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து தாம்பத்திய உறவை வெறுக்கிறாள். திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறை யக்கூடும்.
திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். இதனாலும் உறவில் ஈடுபட வெறுப்பு ஏற்படலாம். இதனால் தனக்கு அதில் ஆர்வமே இல்லாதது போல நடிப்பார்கள். தலைவலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களின் அளவுகளைப் பற்றிய கவலை, உடல்வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒருவிதப் படபடப்பு, அளவுக்கதிக வியர்வை போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு செக்ஸில் வெறுப்பு வருவது சகஜமான ஒரு விஷயம்.
தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது தீர்க்க முடியாத குறையில்லை என்கிறது மருத்துவம். கணவனது பக்குவமான அணுகுமுறை, மனைவியிடமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப்பிரச்சினையைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக்கியமாம். மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு என்கின்றனர் உளவியலாளர்கள்
7 ”செகன்ட்ஸுக்கு” ஒரு முறை ஆண்களுக்கு ”செக்ஸ்” நினைப்பு வருமா?
புது ஷூ வாங்கலாமா, ஷாப்பிங் போகலாமா, பிரண்ட்ஸ் என்ன பண்ணிட்டிருப்பாங்க, பாஸ் ஓவரா பேசிட்டாரே வேற வேலை பார்க்கலாமா, 'செங்கல்' போனை தூக்கிப் போட்டுட்டு புது செல்போன் வாங்கலாமா என்ற வரிசையில்தான் பெரும்பாலான ஆண்களின் சிந்தனை ஓட்டம் பொதுவாக இருக்கிறதாம். இதில் தவறாமல் இடம் பெறுகிறது செக்ஸ் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
அதேசமயம், ஆண்களின் மூளை ஒவ்வொரு 7 விநாடிக்கும் ஒருமுறை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
அப்படிப் பார்த்தால், ஒரு ஆண், சராசரியாக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் விழித்திருப்பதாக எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு 8000 முறை அவன் செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்கியிருக்க வேண்டும்.
ஆனால் இது சாத்தியமா, 7 விநாடிகளுக்கு ஒருமுறை ஆண்கள் செக்ஸ் நினைப்பில் மூழ்குகிறார்களா என்று செக்ஸாலஜிஸ்ட்டுகளிடம் கேட்டால், கண்டிப்பாக வாய்ப்பே இல்லை என்று மறுக்கிறார்கள்.
இதுகுறித்து டாக்டர் சீமா என்பவர் கூறுகையில், இதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஒரு வேளை யாருக்காவது அப்படி இருந்தால் நிச்சயம் அவர் மன நல மருத்துவரைப் போய்ப் பார்ப்பது நல்லது.
காரணம், செக்ஸ் ரீதியான கோளாறு இருந்தால்தான் இப்படிப்பட்ட எண்ணம் தோன்றும். அதற்கு சிகிச்சை தேவை என்கிறார்.
32 வயதான மல்லிகா என்ற உளவியல் துறை சார்ந்த பெண் கூறுகையில், இது நிச்சயமாக உண்மை இல்லை என்றே நான் நினைக்கிறேன். சில ஆண்களுக்கு செக்ஸ் நினைப்பு அதிகம் இருப்பது உண்மைதான்.
ஆனால் ஒட்டுமொத்த ஆண்களையும் இதில் சேர்த்து விட முடியாது. செக்ஸைப் பற்றியே எப்போதும் ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பொதுவாக கூறுவது தவறு என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், ஈர்ப்பும் சற்றுஅதிகமாக இருக்கும். இது இயற்கையானதே.
அவர்களது ஹார்மோன் வளர்ச்சிதான் அதற்குக் காரணம். ஆனால் 26 வயதைத் தாண்டி விட்ட ஆண்களுக்கு 7 விநாடிகளுக்கு ஒரு முறை செக்ஸ் நினைப்பு வரும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களது மனதில் செக்ஸை விட மற்ற விஷயங்கள் நிச்சயமாக அதீதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் பல்வேறு வகையான பொறுப்புகள் மனதில் வந்து உட்கார்ந்து விடும். அதுகுறித்த சிந்தனையில்தான் அவர்கள் அதிகம் மூழ்கியிருப்பார்களே தவிர செக்ஸ் அவர்களை ஆக்கிரமிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.
28 வயதான நம்ரதா என்பவர் கூறுகையில், நான் எனது ஆண் நண்பர்களை அவ்வப்போது சீண்டிப் பார்ப்பேன். அவர்களில் பெரும்பாலானோரும் செக்ஸ் குறித்து அதிகம் சிந்திப்பதில்லை என்பதை புரிந்து கொள்வேன்.
தங்களது வேலையில் முன்னேறுவது, குடும்பப் பொறுப்புகள், மனைவி, குழந்தை குறித்த அக்கறை உள்ளிட்டவைதான் அவர்களிடம் அதிகமாக இருக்கும். செக்ஸ் குறித்த சிந்தனை அவர்களிடம் அதீதமாக இருப்பதில்லை என்றார்.
சரி மருத்துவ ரீதியாக ஒரு ஆணின் மனது செக்ஸ் குறித்து எந்தவகையான சிந்தனையைக் கொண்டிருக்கும் என்று டாக்டர் சீமாவிடம் கேட்டால், பெண்களை விட ஆண்கள் வெளிப்படையாக செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்.
இது பொதுவானது. மேலும் செக்ஸை ஒரு மனப் பளுவை நீக்கும் மருந்தாக ஆண்கள் கருதுகிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை அப்படியில்லை.
ஆண்கள் செக்ஸ் சிந்தனையில் மூழ்குவது என்பது பெண்களை விட அதிகம் நடக்கும் ஒன்றுதான் என்றாலும் கூட 7 விநாடிகளுக்கு ஒருமுறை சத்தியமாக நடப்பதில்லை என்பதே உண்மை என்றார்.
இதற்கிடையே, ஆண்களின் செக்ஸ் குணாதிசியங்கள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வித்தியாசமான முடிவுகள் வந்துள்ளன.
அதில், 54 சதவீத ஆண்கள் தினசரி செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குவதாகவும், ஒரு நாளைக்கு பலமுறை செக்ஸ் சிந்தனை அவர்களுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
43 சதவீதம் பேருக்கு வாரத்திற்கு சில முறையும், சிலருக்கு மாதம் சில முறையும் செக்ஸ் சிந்தனை ஏற்படுகிறதாம். 4 சதவீதம் பேருக்கு மாதத்திற்கு ஒருமுறைதான் செக்ஸ் சிந்தனை வருகிறதாம்.
இதிலிருந்து பார்த்தால், சராசரியாக ஆண்களில் பாதிப் பேருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை கூட செக்ஸ் சிந்தனை வருவதில்லை என்பதை உணரலாம்.
உண்மையில், செக்ஸ் சிந்தனை அதிகம் இருப்பவர்களை விட இவர்கள்தான் கவலைக்குரியவர்கள்...!
ஆண்மை அதிகரிக்க வேண்டுமா? தினமும் உறவு கொள்ளுங்கள்!!
இடைவெளி விடாமல் தினமும் செக்ஸ் உறவு கொண்டால் ஆண்மை அதிகரிக்கும் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.
கணவன்-மனைவி இடையே திருமணமான சில நாட்களுக்கு செக்ஸ் உறவு மிக அதிகளவில் இருப்பது வழக்கம். பின்னர் சிறிது சிறிதாக உறவு கொள்ளும் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம், செக்ஸ் உறவு என்றால் இவ்வளவுதானா என்ற அலுப்பும் சலிப்பும்தான்.
தினமும் செக்ஸ் உறவு கொள்ளும் தம்பதிகளை பார்ப்பது மிகவும் அரிது. பொதுவாக வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே செக்ஸ் உறவு வைத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதிலும் தம்பதிகளிடையே சண்டை, நோய், களைப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்த அளவும் நீண்ட போக வாய்ப்பு உள்ளது.
இந்த காரணங்களை எல்லாம் இல்லாவிட்டாலும் சில தம்பதிகள் வேண்டுமென்றே செக்ஸ் உறவை தள்ளி போடுகின்றனர். அதற்கு தம்பதிகள் சொல்லும் முக்கிய காரணம் தினமும் செக்ஸ் உறவு கொண்டால், உடல்நலம் குன்றிவிடும், ஆண்மைக் குறைந்துவிடும் என விளக்கம் அளிக்கின்றனர்.
இதனால் மாதவிடாய் நாட்கள் உட்பட இடைவெளிகளை இதற்கு பயன்படுத்தி கொள்வதாக கூறுகின்றனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து என ஆஸ்திரேலியா டாக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலியா டாக்டர் டேவிட் கிரீனிங் கூறுகையில், "நாட்கள் இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தால், ஆண்மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. தினமும் உறவு கொண்டால் ஆண்களின் உடலில் உள்ள செக்ஸ் உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு, வளமான விந்து உருவாக உதவுகிறது.
தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் செக்ஸ் உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கிறது. வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
தினமும் செக்ஸ் உறவு கொள்வதன் மூலம் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிக்கிறது. உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளியேற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாக்கத்திற்கு வழிவகை ஏற்படுகிறது.
ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந்துகளில் உள்ள டிஎன்ஏ-க்கள் அதிகளவில் சேதமடைகின்றன. இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. வளமில்லாத விந்துகளை கொண்ட ஆண்களை தினமும் உறவு கொள்ள செய்து ஆராய்ச்சி செய்ததில், 30 சதவீதம் ஆண்களின் விந்து செல்கள் வளமானதாக மாறியது தெரியவந்தது," என்றார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த இனப்பெருக்க மருத்துவ இயல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்சம் வேண்டுமா?, நோ டென்சன் ரிலாக்ஸ்!
என்பது தெரியாமலேயே இன்னும் பல தம்பதியர் தாம்பத்ய உறவில் ஈடுபடுகின்றனர்.
மனைவியரின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு பிறகு தங்களுக்கு உச்சநிலை எட்டியதுடன் உறங்கிப்போகும் கணவர்களே அதிகம். இருவரும் ஏக காலத்தில் உச்சத்தை எட்டும் நிலையே முழுஇன்பம் என்பதை பல ஆண்கள் அறியாமலிருக்கிறார்கள்.
இதனால் உணர்ச்சிகளால் கிளறப்பட்டு உச்சநிலை அடையாத பெண்கள் பாலியல் வேட்கையை தணிக்க முடியாமல் ஏமாற்றத்திற்கும், தவிப்பிற்கும் ஆளாகிறார்கள்.
அதை வெளிப்படையாகக் காட்டமுடியாமல் வெறுப்புக்கு ஆளாவதால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், மணமுறிவுகள், பிரிவுகள், முறை தவறிய உறவுகள் என்று பல வழிகளில் இது வெளிப்பட ஆரம்பிக்கிறது. எனவே உச்சநிலை அடைவதற்கான வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளனர் பிரபல செக்ஸாலஜிஸ்ட்கள்.
அவசரம் தேவையில்லை
உலகளவில் பாலுறவு தொடர்பாக எடுக்கப்பட்ட சர்வேயில் பெரும்பான்மையினர் செக்சில் முழு திருப்தியடையவில்லை என கூறியிருந்தனர். திருமணமாகி பத்து ஆண்டுகளான பெண்களும் இதில் அடக்கம்.
இருவரும் ஒருசேர தொடங்கும் உறவில் ஆணுக்கு எளிதில் திருப்தி ஏற்பட்டு விடும். பெண்ணிற்கு தேவையான இன்பத்தை ஆண் முழுமையாக தரவேண்டுமெனில் மென்மையாக மெதுவாக தொடங்கவேண்டும். அவசரப்படாமல் உறவைத் தொடங்கினால் பெண்கள் உச்சபட்ச இன்பத்தை அடைவார்கள்.
நோ டென்சன் ரிலாக்ஸ்
படுக்கையறையில் டென்சன் ஆகாது. கோட்டையை பிடிக்கப்போவது போல் அவசரப்படாமல் இசைக்கு ஸ்வரம் சேர்க்கும் கலைஞன் போல உறவை ரிலாக்ஸ்சாக தொடங்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு நரம்பும் அந்த உன்னத தருணத்தை அடையும் என்பது அவர்களின் கருத்து.
தம்பதியரின் உடற்கூறு அமைப்பை பற்றி நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எங்கு தொட்டால் உணர்ச்சி மேலிடுகிறது என்பதை ஒவ்வொரும் தமது துணைக்கு புரிய வைத்து உறவு கொண்டால் உச்சநிலை அடையமுடியும் என்கின்றனர்.
ஈகோ தேவையில்லை
மனதும், உடலும் அமைதியான நிலையிலேயே உறவை தொடங்கவேண்டும். ஏதோ அவசரத்திற்கு உடல் தேவைக்கு என உறவு வைத்துக்கொண்டால் ஆர்கசம் அடைய முடியாது.
சக்தி முழுவதையும் தயார்படுத்தி மனதளவிலும் உடலளவிலும் உறவுக்கு தயாரானால் மட்டுமே உச்சகட்ட இன்பத்தை அடையமுடியும்.
உறவில் ஈடுபடும் தம்பதியருக்கிடையே ஈகோ கூடாது. யாருக்கு என்ன தேவையோ அதை கேட்டுபெறுவதும். அதேபோல் துணைக்கு அதுபோல இன்பத்தை அளிப்பதும் அவசியம்.
உறவில் மெருகேற்றுங்கள்
ஒவ்வொருநாளும் புதுமையான முறையில் தொடங்கினால் ரெஸ்பான்ஸ் அதிகம் இருக்கும். இடத்தையும், செயல்பாட்டையும் மாற்றி மாற்றி வைத்துக்கொள்வது ஆர்கசத்தை அடையும் எளிய வழியாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உறவில் உச்சநிலை என்பது துரித உணவு போல உடனடியாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஏனெனில் உறவில் அது ஒரு முக்கிய கட்டம். சிற்பியின் கையால் செதுக்க செதுக்க கிடைக்கும் சிற்பம் போல உறவில் மெருகேறினால்தான் உச்சத்தை அடையமுடியும்.
பாலுறவில் பெண்ணுறுப்பின் மேற்புறத்திலுள்ள கிளிட்டோரிஸ் தூண்டல் என்பது முக்கியப் பங்காற்றுகிறது. பெண்ணை முழுஇன்பப் பாதைக்கு கொண்டு செல்லும் முக்கிய நடவடிக்கை இது. கிளிட்டோரிஸ் என்பது உணர்ச்சி நரம்புகளின் முடிச்சு மையம். இதை சரியானபடித் தூண்டினால் காமனை வெல்லலாம்.


